Schaeffler AG

அபாயங்களை முன்கூட்டியே கண்டறிவதற்கு விரும்பத்தகாத வளர்ச்சிகளைப் புகாரளிப்பது முக்கியம்

Schaeffler என்ற பெயர் தரம் மற்றும் புதுமைகளைக் குறிக்கிறது. பல தசாப்தங்களாக சிறந்த பணியின் மூலம் இந்த நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ளோம். சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்பதும் பொறுப்பான சமூகச் செயல்களும் நமது நற்பெயருக்கான மற்றும் எங்கள் நிலையான நிறுவனத்தின் வெற்றிக்கான சில கோட்பாடுகளாக உள்ளன. சட்டவிரோதமான மற்றும் பொறுப்பற்ற நடத்தை இந்த நற்பெயரைக் கடுமையாகச் சேதப்படுத்துவதுடன் நிரந்தரமாக நமது வெற்றிக்கு ஆபத்தை விளைவிக்கும்.

பயனுள்ள இணக்க மேலாண்மை அமைப்பின் ஒரு அங்கமாக இந்த Incident Reporting System (நிகழ்வு புகாரிடல் அமைப்பு), Schaeffler-க்கு கணிசமான அபாயங்களை விளைவிக்கக்கூடிய விரும்பத்தகாத வளர்ச்சிகளை முன்கூட்டியே கண்டறிவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் காரணத்திற்காக, சில இணக்க மீறல்கள் பற்றிய புகார்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு செயலாக்கப்படும்.

இந்த Incident Reporting System (நிகழ்வு புகாரிடல் அமைப்பு) ஐ பயன்படுத்தி, வழக்கமான தகவல்தொடர்பு முறைகளைப் பயன்படுத்துவதோடு, உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இணக்க மீறல்கள் பற்றிய தகவலை வழங்குவதற்கான வசதியை நாங்கள் வழங்க முடியும். நீங்கள் ஆன்லைனில் அல்லது தொலைபேசி மூலம் 24 மணிநேரமும், வாரத்தில் ஏழு நாட்களும், உலகில் எங்கிருந்தும் தகவல்களை வழங்கலாம்.

நீங்கள் அநாமதேயமாக தகவலை வழங்க விரும்பினால், உங்கள் அறிக்கையின் முடிவில் பாதுகாப்பான அஞ்சல் பெட்டியை அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதனால் புகார் செயலாக்கத்தின் போது அநாமதேய தகவல்தொடர்புகள் தொடர்ந்து நடைபெறும்.

விரும்பத்தகாத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால் இணக்கத் துறைக்கு இணக்கம் சார்ந்த பொருள் மீது அநாமதேயமாகக் கேள்வியை வைக்கும் வாய்ப்பும் உங்களுக்கு உள்ளது.

உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தும் புகாரை வழங்குமாறு உங்களை ஊக்குவிக்கிறோம். தனியுரிமைக் கொள்கை

புகார்கள் சரியான நேரத்தில், கவனமாக, முழுமையாக மற்றும் சரியாக வழங்கப்பட வேண்டும்.

வேண்டுமென்றே தவறான புகார்களை வழங்குவதற்காக Incident Reporting System-ஐ (நிகழ்வு புகாரிடல் அமைப்பை) தவறாகப் பயன்படுத்துவது குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.

உரையை எளிமைப்படுத்த, புகாரளிப்பவர், பணியாளர், தொடர்பு போன்றவற்றில் ஆண் பாலின வடிவத்தைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த விதிமுறைகள் பெண் பாலின வடிவத்திற்கும் சமமாகப் பொருந்தும் என்று சொல்லாமலேயே அறிந்து கொள்ளவும்.

நான் ஏன் புகாரை சமர்ப்பிக்க வேண்டும்?
நீங்கள் எந்த நிகழ்வுகளைப் புகாரளிக்கலாம்?
ஒரு புகார் எவ்வாறு செயல்படுகிறது? ஒரு அஞ்சல் பெட்டியை நான் எப்படி அமைப்பது?
நான் எப்படிக் கருத்தைப் பெற்ற பின்பும் அநாமதேயமாக இருப்பது?
Schaeffler புகாரளிக்கும் அமைப்பு மற்றும் புகார் பொறிமுறை பற்றிய கூடுதல் தகவல்கள்
உள்ளக மற்றும் வெளியக புகாரளிக்கும் அலுவலகத்திற்கு இடையே தேர்வு செய்வதற்கான உரிமை