Kaufland
எமது நிறுவனத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றாக “நாங்கள் பொருந்தக்கூடிய சட்டங்களையும், உள்ளக வழிகாட்டுதல்களையும் கடைப்பிடிப்போம்” (இணக்கம்) என்பதைக் கொண்டிருக்கின்றோம். எமது சட்டப்பூர்வ இணக்கமான நடத்தையில் நீங்கள் எங்களை நம்பலாம் என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். சொல்லபோனால், எமது நிறுவனத்தின் தொடர்ச்சியான வெற்றிக்கு ‘இணக்கம்’ தான் முக்கியமான கூறாக உள்ளது.

எனவே, சாத்தியமான முறைகேடுகளை நேரடியாகவும், முடிந்தவரை விரைவாகவும் எதிர்கொள்வது எங்களுக்கு முக்கியமாகும். முதற்கட்டமாக, இத்தகைய முறைகேடுகள் குறித்த புகார்களைப் பெறுவதன் மூலமாகவே இதை அடைய முடியும். இரண்டாவதாக, நிறுவனத்தைப் பாதிக்கும் இணக்கம் தொடர்பான விஷயங்களில் ஆலோசனையைப் பெறுவதற்கான வாய்ப்பையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

இந்த நோக்கத்திற்காக ஆன்லைன் புகார் பதிவு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் தகவல்களை வழங்கவா அல்லது தகவல்களைப் பெறவா அமைப்பைப் பயன்படுத்துகிறீர்கள்: உங்கள் தகவல்கள் கண்டிப்பாக இரகசியமாக நடத்தப்படும் மற்றும் தேவைப்பட்டால் பெயர் குறிப்பிடாமல் கையாளப்படும். உங்கள் புகாரைப் பற்றிய கேள்விகளுக்காக உங்களைத் தொடர்புகொள்வதற்காக, நீங்கள் ஒரு அஞ்சல் பெட்டியை (postbox) அமைப்பதை நாங்கள் பரிந்துரைக்கிறோம். நீங்கள் BKMS வழியாக எங்களுக்கு ஒரு புகாரை அனுப்பினால், புகார் தெரிவிப்பவர் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின் முழுப் பாதுகாப்பையும் நீங்கள் பெறுவீர்கள்.

தயவுசெய்து இந்த ஆன்லைன் புகாரளிக்கும் அமைப்பைப் பொறுப்புடன் பயன்படுத்தவும். இதைப் பிற நபர்களைக் குற்றஞ்சாட்டுவதற்காகத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. எனவே, உங்கள் அறிவுக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப சரியாக இருக்கிறதென்று நீங்கள் நம்பும் தகவல்களை மட்டுமே நீங்கள் எங்களுக்கு வழங்க வேண்டும்.

இணக்கம் தொடர்பான விஷயங்களைப் புகாரளிப்பதற்காகவே இந்த ஆன்லைன் புகாரளிக்கும் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் பிற விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

இந்த ஆன்லைன் புகாரளிக்கும் அமைப்புடன் சேர்த்து, புகார்களைச் சமர்ப்பிக்க அல்லது சந்தேகங்களைக் கேட்க ஏற்கனவே இருக்கும் பிற வழிமுறைகள் (உ.ம். இணக்க அதிகாரிகள்) தொடரும்.
நான் ஏன் புகாரை சமர்ப்பிக்க வேண்டும்?
இணையவழி புகாரளிக்கும் அமைப்பு மூலம் என்ன பிரச்சினைகளைப் புகாரளிக்க முடியும்?
ஒரு கவலையைப் புகாரளிப்பதற்கான அல்லது கேள்வியைக் கேட்பதற்கான செயல்முறை என்ன, ஒரு அஞ்சல் பெட்டியை நான் எப்படி அமைப்பது?
நான் எப்போது, எப்படிப் பின்னூட்டத்தைப் பெறுவேன்?
இணையவழி புகாரளிக்கும் அமைப்பைப் பயன்படுத்தும் போது எனது தரவு எவ்வாறு பாதுகாக்கப்படும்?