Lidl

எங்கள் பெருநிறுவனக் கொள்கைகளில் ஒன்று: "பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் உள்ளக வழிகாட்டுதல்களுடன் நாங்கள் இணங்குகிறோம்" (இணக்கம்). சட்டத்திற்கு இணங்கச் செயல்படுவது எங்களிடம் நம்பிக்கை வைக்க உங்களை அனுமதிக்கிறது. எனவே, எங்கள் நிறுவனத்தின் நீடித்த வெற்றிக்கு இணக்கம் ஒரு முக்கிய அங்கமாகும்.

ஆகையால், சாத்தியமான தவறான நடத்தைகளை முடிந்தவரை விரைவாகக் குறிவைத்து எதிர்ப்பது எங்களுக்கு முக்கியமானதாகும். ஒருபுறம், சாத்தியமான தவறான நடத்தை பற்றிய புகார்களைப் பெறுவதன் மூலம் இதை நாங்கள் அடைவோம். மறுபுறம், நிறுவனத்தைப் பாதிக்கும் இணக்கம் தொடர்பான விடயங்களில் ஆலோசனையைப் பெறுவதற்கான வாய்ப்பை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

அத்தகைய நிகழ்வுகள் குறித்துப் புகார் அளிப்பதற்கு, இந்த இணையவழி புகாரளிக்கும் அமைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு கவலையைப் புகாரளித்தாலும் அல்லது ஆலோசனையைப் பெற்றாலும்: அந்த விடயம் கண்டிப்பாக ரகசியமானதாகக் கையாளப்படும்.

இந்த இணையவழி புகாரளிக்கும் அமைப்பைப் பொறுப்புடன் பயன்படுத்தவும். இதைப் பிறரைக் குற்றஞ்சாட்டுவதற்காகத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. உங்கள் அறிவு மற்றும் நம்பிக்கைக்கு ஏற்றவாறு நீங்கள் சரியானதாகக் கருதும் தகவல்களை மட்டுமே அனுப்புமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

சாத்தியமான இணங்க முடியாத நிகழ்வுகள் பற்றிய கவலைகளைப் புகாரளிப்பதற்காக இணையவழி புகாரளிக்கும் அமைப்பு அமைக்கப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் பிற விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

பிரச்சினைகைளைப் புகாரளிப்பதற்கு அல்லது ஆலோசனையைப் பெறுவதற்கு (எ.கா. இணக்க அதிகாரி) இந்த இணையவழி புகாரளிக்கும் அமைப்புக்கு மேலதிகமாகக் கிடைக்கும் அந்தந்த விருப்பத்தேர்வுகள் அப்படியே இருக்கும்.

நான் ஏன் புகாரை சமர்ப்பிக்க வேண்டும்?
இணையவழி புகாரளிக்கும் அமைப்பு மூலம் என்ன பிரச்சினைகளைப் புகாரளிக்க முடியும்?
ஒரு கவலையைப் புகாரளிப்பதற்கான அல்லது கேள்வியைக் கேட்பதற்கான செயல்முறை என்ன, ஒரு அஞ்சல் பெட்டியை நான் எப்படி அமைப்பது?
நான் எப்போது, எப்படிப் பின்னூட்டத்தைப் பெறுவேன்?
இணையவழி புகாரளிக்கும் அமைப்பைப் பயன்படுத்தும் போது எனது தரவு எவ்வாறு பாதுகாக்கப்படும்?